பக்கம் பக்கமா பிஜேபிக்கு துதிபாடும் அதிமுக அமைச்சர்கள்!!! கோதாவில் குதித்த செல்லூரார்......

சனி, 30 மார்ச் 2019 (17:39 IST)
அரசியலில் ஆகட்டும் சரி, நாட்டில் ஆகட்டும் சரி மோடி தான் சூப்பர் ஸ்டார் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
 
பொதுவாகவே அதிமுகவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தனி ரகம். மக்களை சநித்து பேசினாலோ, அல்லது செய்தியாளர்களை சந்தித்து பேசினாலோ உச்சகட்ட பரபரப்பை கிளப்புவர்.
சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேநந்திர பாலாஜி ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார். அவர் நாட்டை பாதுகாக்கின்ற மல்யுத்த வீரர், மோடி ஒரு கதாநாயகன், மோடி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என ஏகபோகமாக புகழ்ந்தார்.
இந்நிலையில் மோடியின் புகழை பாட அமைச்சர் செல்லூர் ராஜுவும் கோதாவில் குதித்துள்ளார். அவர் பேசுகையில் அரசியலில் ஆகட்டும் சரி, நாட்டில் ஆகட்டும் சரி மோடி தான் சூப்பர் ஸ்டார் என கூறினார். புகழ்பாடியே பழக்கப்பட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் இடத்தில் மோடியை வைத்துப் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்