கருத்துக்கணிப்புகளால் திடீர் மாற்றம்! 3வது முயற்சியை கைவிடும் மாயாவதி-மம்தா

திங்கள், 20 மே 2019 (08:48 IST)
மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் யார் அடுத்த ஆட்சியை பிடிப்பது என்பது இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவை பிடிக்காத மீடியாக்கள் கூட பாஜக மெஜாரிட்டியை நெருங்கிவிட்டதாகவே கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன
 
தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் பாஜகவை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால் தனித்து போட்டியிட்டதன் விளைவாக பாஜகவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்ததால் அது பாஜகவுக்கு சாதகமாகிவிட்டதாகவே அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இதனால் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இனி இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே. அதுவும் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராகுல்காந்தியின் பிரதமர் கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
அதேபோல் தமிழகத்தை பொருத்தவரையில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும், பாஜக ஆட்சி அமைத்தால் ஆளும் கட்சியின் கூட்டணியில் இல்லாத நிலை தான் ஏற்படும். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றும் எந்தவித பயனும் இல்லாதது போலவே இம்முறை திமுக அதிக தொகுதிகளில் வெற்றி அடைந்தும் அமைச்சர் பதவி கிடைக்காத நிலைதான் ஏற்படும் என கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்