மக்களவைத் தேர்தலின் 7 கட்டமான வாக்குப்பதிவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்துமுடிந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில் ஆந்திரப் பிரதேசம் - 25, அருணாசலப் பிரதேசம் - 2, பிகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு காஷ்மீர் - 2, மகாராஷ்டிரம் - 7, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, அசாம் - 5, ஒடிசா - 4, சிக்கிம் - 1, தெலங்கானா - 17, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தராகண்ட் - 5, மேற்கு வங்காளம் - 2, அந்தமான் நிக்கோபார் - 1, லட்சத்தீவு - 1 என மொத்தம் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்றைய வாக்குப்பதிவின் சில முக்கிய அம்சங்கள்
பிகார் - 50%, அருணாசலப் பிரதேசம் - 66%, லட்சத் தீவுகள் - 66%, மகாராஷ்டிரம் - 56%, சத்தீஸ்கர் - 56%,உத்தரப் பிரதேசம் - 63.69%, ஒடிசா - 68%, அந்தமான் நிகோபார் - 70.67%, தெலங்கானா - 60%, ஜம்மு மற்றும் காஷ்மீர் - 54.49%, உத்தராகண்ட் - 57.85%, ஆந்திரப் பிரதேசம் - 66%,சிக்கிம் - 69%, மிசோரம் - 60%,நாகாலாந்து - 78%, மணிப்பூர் - 78.2%, மேகாலயா - 67.16%,திரிபுரா - 81.8%, அசாம் - 68%, மேற்கு வங்கம் - 81% ஆகிய அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.