தேர்தலில் போட்டியிடாத தீபா & மாதவன் – காரணம் என்ன ?

சனி, 23 மார்ச் 2019 (09:35 IST)
தேர்தலில் தீபா பேரவை மக்களவைத் தேர்தலில் போட்டியிடாது எனவும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் அணி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். விருப்பமனுத் தாக்கல் குறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள், வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் திடீரென்று தேர்தலில் போட்டியில்லை எனத் தீபா அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ தீபா பேரவை தேர்தலில் போட்டியிட்டால் அது அதிமுகவின்  வெற்றியைப் பாதிக்கும். அதனால் அதிமுக தொண்டர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். அதனால் இரட்டை இலை சின்னத்திற்கு மனப்பூர்வமான ஆதரவை அளிக்கிறோம். பொதுக்குழுவிலல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீபா பேரவையை அதிமுகவுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவில் இணைந்தால் எந்தப் பதவியும் எனக்குத் தேவையில்லை. தலைமையிடமிருந்து அழைப்பு வந்தால் பிரச்சாரத்திற்கு செல்வேன் ’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்