வயசுக்கு மரியாதை தர வேண்டாமா? பிரச்சாரத்தில் செண்டிமெண்டாய் அடிக்கும் எடப்பாடியார்

வெள்ளி, 22 மார்ச் 2019 (20:08 IST)
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளுகும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், தர்மபுரி தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி பகுதியில் அன்புமணி ராமதாஸ் உடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பிரச்சாரத்தின் போது மிகவும் செண்டிமெண்டாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேசியது பின்வருமாறு, 
 
மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, அன்புமணி ராமதாசை வெற்றி பெற செய்யுங்கள். அதேபோல் பாப்பிரெட்டி மற்றும் அரூர் சட்டசபை இடைத்தேர்தல்களில், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர். இந்த முறையும் அவர் மத்திய அமைச்சராக வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அப்படி அவர் அமைச்சராக வரும் போது, தர்மபுரி மாவட்டம் பெரும் முன்னேற்றம் அடையும்.
பாமக நிறுவனர் ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு மணி அடிக்கிறார் என்று ஸ்டாலின் இன்று சேலம் கூட்டத்தில், பேசியுள்ளார். இது எவ்வளவு மோசமான வார்த்தை. ராமதாஸின் வயது என்ன? அனுபவம் என்ன? 
 
ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் மரியாதை தரப்பட வேண்டும். அவரது வயதுக்கு மரியாதை தரவேண்டும். ஆனால் இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வளர்ப்பு அப்படி. உங்களுக்கு எவ்வளவு அகங்காரமும், திமிரும் இருந்தால் இப்படி பேசுகிறீர்கள்? இந்த திமிர் அத்தனையையும், இந்த தேர்தல் மூலமாக உடைத்தெறியப்பட வேண்டும் என பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்