இதற்காக, தேசிய மகளிர் ஆணையம் ஆசம் கானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதோடு ஆசம்கான் மீது இந்த சம்பவத்தால் 9 வழக்குகள் பதிவாகி உள்ளன.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆசம் கான் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதவாது, ஜெயப்பிரதாவை விரல் பிடித்து அழைத்து சென்று ராம்பூர் தெருக்களில் அறிமுகப்படுத்தியதே நான்தான். என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவேன் என குறிப்பிட்டுள்ளார்.