லாக்கப்பில் நடிகர் ஆதி - தனுஷ் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:04 IST)
மிருகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து  ஈரம், அய்யனார், மரகத நாணயம், யூ டர்ன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கில் அவர் நடித்திருந்த ரங்கஸ்தலம் சூப்பர் ஹிட் அடுத்ததால் டோலிவுட்டில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார். 
இதற்கிடையில் தற்போது தமிழில் "லாக்கப்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.  மேலும் ஈஸ்வரி ராவ்,பூர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 
SG சார்லஸ்  இயக்கம் இப்படத்தில் நடிகர் வைபவ் போலீசாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழப்பமான  நிலையில் ஆதி சிறைக்குள் இருக்கும் இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்