கவலையில் காமெடி நடிகர்

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (18:01 IST)
எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல், கவலையில் இருக்கிறாராம் காமெடி நடிகர்.

 
டி.வி.யில் காமெடி பண்ணி, சினிமாவிலும் காமெடி பண்ணி… இப்போது ஹீரோவாக உயர்ந்திருப்பவர் மணக்கும் காமெடியன்.  இவர் ஹீரோவாக நடித்த படங்கள் சுமார் ரகம்தான். இருந்தாலும், அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய அதிக நாட்கள் எடுத்துக்  கொள்கிறார். இத்தனைக்கும் அந்தப் படம் ரெடியாகி ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறதாம்.
 
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நடித்த படத்தின் பெயரைத்தான் இந்தப் படத்துக்கும் வைத்துள்ளனர். ஆனால், பழைய படத்தில்  பத்து சதவீதம் கூட இந்தப் படத்தில் சரக்கு இல்லையாம். அதனால், படத்தை ரிலீஸ் செய்யலாமா, வேண்டாமா என்ற  குழப்பத்தில் இருக்கிறாராம். மாற்றங்கள் செய்யாமல் படத்தை அப்படியே ரிலீஸ் செய்தால், நிச்சயம் ஊத்திக் கொள்ளும் என்று  கவலையாகவும் இருக்கிறதாம்.
அடுத்த கட்டுரையில்