நம்பர் ஒன் நடிகையின் காதலர் எடுத்த அதிரடி முடிவு ; விரைவில் அரசியலா?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:23 IST)
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தாரா நடிகைக்கு அவரது காதலர் ரசிகர் மன்றத்தை தொடங்கும் முடிவில் இருக்கிறாராம்.


 

 
காரை மையமாக வைத்து நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படம் சரியாக வெற்றியடையாமல் போனதற்கு, அப்படத்தை சரியாக புரோமோட் செய்யாத தயாரிப்பாளர்தான் என நினைக்கிறாராம் காதலர். இது தொடர்பாக தனது கோபத்தை தயாரிப்பாளர் தரப்பிடமும் அவர் காட்டினாராம்.
 
மேலும், அந்த படம் வெளியானது போது, தியேட்டரில் 60 அடிக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய வைத்ததெல்லாம் இவரின் ஏற்பாடுதான் எனக் கூறப்படுகிறது. இனிமேல் இவர்களை நம்பி பலனில்லை என முடிவெடுத்த காதலர், விரைவின் நடிகையின் பேரில் ரசிகர் மன்றம் தொடங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம். ரசிகர் மன்ற தலைவர் யாருன்னு கேட்காதீர்கள். அதுவும் அவரேதானாம். 
 
அப்ப.. நம்பர் ஒன் நடிகை பின்னாடி அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
அடுத்த கட்டுரையில்