நடிகர் விஷ்ணுவை திருமணம் செய்கிறாரா அமலாபால்?

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:54 IST)
இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நடிகை அமலாபால், சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணுவை திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஷ்ணு, தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் இருப்பினும் தங்களது மகன் ஆர்யாவை தான் நல்லபடியாக பார்த்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் இயக்குனர் விஜய்யை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகை அமலாபால், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தற்போது விஷ்ணுவை அமலாபால் திருமணம் செய்யவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.


ஆனால் இந்த செய்தியை விஷ்ணுவிஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்