'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் மட்டுமின்றி அனுஷ்காவின் மார்க்கெட்டும் வானளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது அவருடைய சம்பளம் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை உள்ளதாம்
இந்த நிலையில் மகேஷ்பாபு நடிக்கும் ‘பாரத் எனே நேனு' என்ற தெலுங்கு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட ரூ.2 கோடி சம்பளத்தை அனுஷ்கா வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மகேஷ்பாபு முதலமைச்சராக நடிக்கின்றார். மகேஷ்பாபு-அனுஷ்கா ஆடும் இந்த குத்துப்பாட்டு படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.