ஜியோமி எம்ஐ மேக்ஸ் இன்று முதல் விற்பனை - சலுகைகள் அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (14:47 IST)
ஜியோமி எம்ஐ மேக்ஸ், எம்ஐயுஐ ஸ்மார்ட்போன் ஆகிய செல்போன்கள் இன்று முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.


 

கடந்த மே மாதம் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகையாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று டில்லியில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளது.

16 மெகா பிக்சல் [Mega Pixel] பின்புற கேமரா (rear camera), 5 மெகா பிக்சல் முன் கேமரா (front camera), 85 டிகிரி வைட் ஆங்கிள் திரை (wide angle display), 4850 mAh பேட்டரி (battery) மற்றும் 203 கிராம் எடையுடையது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும், இதில் இன்ஃபரா ரெட் எமிட்டர் [infrared emitter] பொருத்தப்பட்டு உள்ளதால் இது ஒரு சென்சாராகவும், உலகளாவிய ரிமோட் கண்ட்ரோலாகவும் செயல்படும் என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.

இந்த மொபைல் போன்களில் Hungama Play என்ற செயலியை பதிவிறக்கம் செய்து 3 மாதங்களுக்கு இலவச திரைப்படத்தையும், ஒரு வருடங்களுக்கு இலவச இசையையும் கேட்க முடியும்.

இந்த சலுகை முதல் பத்து லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன்கள் இன்று முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்