ஆப்பிள் நிறுவனத்தின் எந்த ஒரு பொருளுமே சந்தையில் சக்கை போடு போட்டு விற்பனையாகும், வாடிக்கையாளர் மத்தியிலும் நல்ல மதிப்பை பெரும். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் 5 டேப்லெட் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன் மினி 5 மாடல் 6.1எம்.எம். அளவு கொண்ட தடிமனாகவும், 7.9 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் லைட்டிங் கனெக்டர், டச் ஐடி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.
மேலும் புதிய ஐபேடில் மைக்ரோபோன் மேல்பாகத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. இம்மாடலில் ஏ 10 ஃபியூசன் சிப் வழங்கப்படுமா,இல்லை ஏ 10 எக்ஸ் ஃபியூசன் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதில் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.