ஒரே மாதத்தில் 16 லட்சம் கணக்குகளுக்கு தடை! – வாட்ஸப் அதிரடி!

வியாழன், 2 ஜூன் 2022 (11:41 IST)
இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் சந்தேகத்திற்கிடமான 16 லட்சம் வாட்ஸப் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமானது வாட்ஸப். இந்தியாவில் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சமீபத்தில் புதிய தொழில்நுட்ப கொள்கைகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டன.

அதன்படி மாதம்தோறும் சர்ச்சைக்குள்ளான கணக்குகள், சந்தேகத்திற்கிடமான கணக்குகளை தடை செய்யும் சமூக செயலிகள் அந்த ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு வழங்கி வருகின்றன.

அந்த வகையில் கடந்த மாதத்தில் சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள வாட்ஸப், பயனாளர்கள் அளித்த புகாரின் பேரில் 122 கணக்குகளையும், தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுப்பதற்காக 16.66 லட்சம் கணக்குகளையும் தடை செய்துள்ளோம். தீங்கு விளையும் முன்னே அதை தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்