பலரும் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸப் கணக்குகளிலும் தனிநபர் கணக்கு, தொழில்ரீதியான தொடர்புகளுக்கான தனிக் கணக்கு என இரண்டு அக்கவுண்ட்களை பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு அக்கவுண்டையும் ஒரே செயலியில் பயன்படுத்த வாட்ஸப்பில் settings > Account > Add Account என்ற வசதிக்குள் சென்றால் கூடுதலாக ஒரு அக்கவுண்டை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
அதுபோல முன்பு புதிய ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸப் சாட்களை மாற்ற அடிக்கடி வாட்ஸப்பை பேக்கப் செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸப்பில் வழங்கப்பட்டுள்ள Tranfer Chats சென்றால் அதில் காட்டும் க்யூ ஆர் கோட் ஸ்கேன்னர் மூலம் புதிய ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து வாட்ஸப் சாட்களையும் அப்படியே புதிய ஸ்மார்ட்போனிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.