ஆஃபர் என கூறி மக்களை ஏமாற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (12:18 IST)
மக்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே ஆஃபர்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு சில அறிவிப்பில் ஆஃபர் ஏதும் இல்லை என்பதே உண்மை.


 
 
வோடஃபோன் நிறுவனம் தற்போது ரூ.53க்கு 1 ஜிபி அளவிளான 3ஜி டேட்டாவை ஒரு மாதத்திற்கு பெறமுடியும். இது போன்ற ஆஃபரை ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன. 
 
இந்த திட்டத்தை பெற வேண்டுமானால் முதலில் ரெண்டல் கட்டணமாக ரூ.1501, ரூ.748 மற்றும் ரூ.494 செலுத்த வேண்டும்.
 
ரூ.748க்கு 3ஜி டேட்டாவும், ரூ.494க்கு 2ஜி டேட்டாவும் அறிவித்துள்ளனர். இந்த ஆஃபரை ஆறு மாதங்கள மட்டுமே பயன்படுத்த முடியும். 
 
ரூ.1501 ரெண்டல் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் செல்லுபடியாகும் 15 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். ஆனால் அதற்கு அடுத்த மாதத்தில் இருந்து 1 ஜிபி 53 ரூபாய்க்கும், 2 ஜிபி 103 ரூபாய்க்கும், 5 ஜிபி 256 ரூபாய்க்கும் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
 
மேலும் 748 ரூபாய் ரெண்டலில் 1 ஜிபி அளவிளான 3ஜி டேட்டா 106 ரூபாய், 494 ரூபாய் திட்டத்தில் 1 ஜிபி அளவிளான 3 ஜி டேட்டா 122 ரூபாய் ஆகும். 
 
ஜியோவிற்கு போட்டியாக இந்த ஆஃபர்களை அறிவித்துள்ளனர். ஆனால் ஜியோவில் ரெண்டல் சார்ஜ் என்று எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்