போட்டி போடும் Flip மாடல்கள்; OPPO Find N2 Vs Samsung Z Flip3! – எது பெஸ்ட்?
புதன், 15 மார்ச் 2023 (12:54 IST)
சமீபமாக ஸ்மார்ட்போன்களில் மடிக்கக்கூடிய ப்ளிப் மாடல்கள் வெளியாகி வரும் நிலையில் ஓப்போ, சாம்சங் நிறுவனங்கள் ப்ளிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
ஸ்மார்ட்போன் யுகத்தில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களும், திரை அளவும் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் பெரிய அளவிலான ஸ்மார்ட்போன்களை பைக்குள் வைக்க முடியாத நிலையில் எளிதில் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய ப்ளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் Samsung Galaxy Z Flip4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது அதற்கு போட்டியாக ஓப்போ நிறுவனம் OPPO Find N2 Flip என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy Z Flip4 மாடலில் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவும், முன்பக்கம் 1.9 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளேவும் உள்ளது. ஆனால் OPPO Find N2 Flip –ல் 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவும், முன்பக்கம் 3.26 இன்ச் அமோலெட் கவர் டிஸ்ப்ளேவும் உள்ளது.
OPPO Find N2 Flip டைமென்சிட்டி 9000+ எஸ்ஓசி ப்ராசஸரை கொண்டுள்ளது. Samsung Galaxy Z Flip4 – ல் ஸ்னாப்ட்ராகன் 8 Gen 1 SoC உள்ளது. கேமராவை போறுத்தவரை சாம்சங்கை விட ஓப்போவில் மெகா பிக்சல் அதிகமாக உள்ளது. சாம்சங்கில் 12 எம்பி + 12 எம்பி டூவல் பின்பக்க கேமரா, 10 எம்பி செல்பி கேமரா உள்ளது. OPPO Find N2 Flip – ல் 50 எம்பி+ 8எம்பி டூவல் பின்பக்க கேமரா, 32 எம்பி செல்பி கேமரா உள்ளது.
பேட்டரி திறனை பொறுத்தவரை Samsung Galaxy Z Flip4 –ல் 3700 mAh பேட்டரியும், 25W சார்ஜிங் திறனும் உள்ளது. OPPO Find N2 Flip –ல் 4300 mAh பேட்டரியும், 44W சார்ஜிங் திறனும் உள்ளது.
Samsung Galaxy Z Flip4 மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.89,999. OPPO Find N2 Flip –ல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட மாடலில் விலை ரூ.89,999 ஆக உள்ளது. கேமரா, பேட்டரி மற்றும் விலை உள்ளிட்டவற்றில் ஓப்போ சிறப்பானதாக உள்ளது. சாம்சங் தயாரிப்பு வகையிலும் ஸ்னாப்ட்ராகன் ப்ராசஸர் வகையிலும் சிறப்பானதாக உள்ளது.