நோக்கியா - ஏர்டெல் கூட்டணி: சிக்களில் ஜியோ!!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (12:12 IST)
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் மீண்டும் தொலைதொடர்பு சாதனங்கள் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டணி வைக்கிறது.

 
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அடுத்த 20 வருடங்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.
 
இப்போது ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டியில் கடினமான தன்மையை கொடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ஏர்டெல்- நோக்கியா கூட்டணி நிகழ்த்தப்பட்டுள்ளது. 
 
புதிய சேவை வட்டங்கள்:
 
ஏற்கனவே சேவைகளை வழங்கும் ஆறு வட்டங்களை (மும்பை, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப், கேரளா) தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் குஜராத், பீகார், மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய 3 புதிய வட்டங்களில் அதன் சேவைகளை விரிவடைய செய்கிறது.
 
கவரேஜ்:
 
நாட்டில் இணைய தரவு பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மேம்படுத்த கவரேஜ் அனுமதிக்கும் 4ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்தை நிகழ்த்தி வருகிறது.
 
வேகமான மொபைல் இணையம்:
 
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய பயன்படுத்தல் சேவையானது நம் அனைவருக்கும் ஒரு சமமான வேகத்திலான மொபைல் இணைய அணுகலை வழங்க அனுமதிக்கும்.
 
2ஜி, 3ஜி வலையமைப்பு விரிவாக்கம்: 
 
மரபுவழி 2ஜி அடிப்படை நிலையங்கள் உட்பட ஏர்டெல் நிறுவனத்தின் எட்டு 3ஜி பிரதேசங்கள் நவீனமயமாக்கப்படும் என்று நோக்கியா குறிப்பிட்டுள்ளது.
 
ஸ்பெக்ட்ரம்: 
 
பார்தி ஏர்டெல் நாட்டில் அதன் ஸ்பெக்ட்ரம் தடத்தை விரிவாக்கும் 173.8 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை கைப்பற்றியுள்ளது. அதன் இருப்பை அதிகமாக்க உதவும் 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 230 மெகாஹெர்ட்ஸை முழுவதும் பெற மொத்தம் ரூ.14,244 கோடி செலவு செய்துள்ளது.
 
வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்