பயனர்கள் தலையில் குண்டு போட்ட phonepe!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:41 IST)
phonepe செயலி வழியாக ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கேஷ்பேக் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அப்படிப்பட்ட ஆன்லைன் செயலியான  phonepe வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. 
 
phonepe செயலி வழியாக ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.1 சேவைக் கட்டணமாகவும், ரூ100-க்கு மேல் ரீசார்ஜ்களுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்