’’டிக் டாக் ’’ மீதான தடை நீக்கம்...பயனர்கள் மகிழ்ச்சி

புதன், 9 ஜூன் 2021 (22:40 IST)
கடந்தாண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சீன செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய அந்நாட்டில் தடை விதித்தார். இந்நிலையில்,. இத்தடைகளை நீக்கி உத்தர்விட்டுள்ளார் தற்போதைய அதிபர் ஜோ பிடன்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் , கடந்த ஆண்டு டிக் டாக் , வீ டாக் உள்ளிட்ட பல சீனச் செயலிகளுக்கு தடை விதித்தார். இதனால் இந்தியாவை அடுத்து அதிக பயனாளர்களைக் கொண்டிருந்த டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு தங்கள் நி்றுவனத்தை விற்கப்போவதாகவும் பேச்சு எழுந்தது.

இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பிடன் டிக்டாக், வீ சாட்டிற்கு எதிராக டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் டிக்டாக் பயனர்கள் பல லட்சம் பேர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்