புதிய வாட்ஸ்அப்பில் பழைய ஸ்டேட்டஸ் வசதி

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:25 IST)
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் அதிகளவில் யாரும் விரும்பவில்லை. இதனால் வாட்ஸ்அப் மீண்டும் பழைய ஸ்டேட்டஸ் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.


 

 
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் ஸ்டேட்டஸ் மற்றும் Profile பகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழைய ஸ்டேட்டஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானோர் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதை நிறுத்திவிட்டனர்.
 
இதனால் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் பழைய ஸ்டேட்டஸ் வசதி இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய அப்டேட்டில் பழைய ஸ்டேட்டஸ் வசதி பெற Info என்ற வசதி வழங்கப்பட உள்ளது. இதனை கிளிக் செய்தால் போதும் பழைய ஸ்டேட்டஸ் வசதி Info என்ற பெயரில் மாறிவிடும். இதே போல் Profile பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
புதிய ஸ்டேட்டஸ் விரும்பிகள் கவலை கொள்ள வேண்டாம். இந்த வசதியில் எந்த மாற்றமும் இல்லை. விரும்பாதவர்கள் பழைய ஸ்டேட்டஸ் வசதிக்கு மாறிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்