கொரோனா பரிசோதனை செய்ய உதவும் My Jio App!

செவ்வாய், 24 மார்ச் 2020 (13:04 IST)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் பலர் மருத்துவமனைகளை நாடி வரும் நிலையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய மை ஜியோ ஆப் உதவுகிறது.

நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிகுறிகளை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ ஆப் உதவுகிறது.

மை ஜியோ அப்ளிகேசனில் உள்ள Corona Symptoms Checker பகுதியை ஓபன் செய்தால் அதில் சுயவிவரங்கள் நிரப்பப்பட்டப்பின் பல்வேறு கேள்விகளையும் அது கேட்கிறது. அதற்கு பதிலளித்தால் அதன் மூலம் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை கணித்து சொல்கிறது. மேலும் அருகில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற மருத்து சோதனை மையங்கள் மற்றும் ஹெல்ப் லைன் எண்களும் அதில் உதவிக்காக இணைக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்