எதிர்பார்ப்பை கிளப்பும் ஐக்கூ 5ஜி ஃபோன்! மார்ச் 4 முதல்..!

சனி, 29 பிப்ரவரி 2020 (14:50 IST)
மொபைல் ஃபோன் வகைகளிலேயே நவீன தொழில்நுட்பங்களை கொண்டதாக வெளிவர இருக்கும் ஐக்கூ மொபைல்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போது இந்திய சந்தைகளில் 4ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் பரவலாக விற்பனையில் உள்ள நிலையில் முன்கூட்டிய தொழில்நுட்பமான 5ஜி திறனை கொண்ட ஸ்மார்ட்ஃபோனை வெளியிட இருக்கிறது ஐக்கூ மொபைல் நிறுவனம்.

ஐக்கூ 3 என்ற பெயரில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்ஃபோன் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ஆகிய ரேம் வகைகளில் வெளியாகிறது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 865 ரக ப்ராசசரைக் கொண்டது. 4440mAh பேட்டரித்திறன் கொண்ட இந்த மொபைல் பின்பக்கம் வைட் கேமராவுடன் மொத்தமாக நான்கு கேமராக்களையும், முன்பக்கம் ஒரு கேமராவையும் கொண்டது.

கேம் விரும்பிகளுக்காக கேம் மோட் மற்றும் அதற்கான பிரத்யேக பட்டன்களும் அளிக்கப்பட்டுள்ளதால் ஜாய் ஸ்டிக்கை போல எளிதாக இதில் கேம் விளையாட முடியும் என கூறப்படுகிறது.

மூன்று வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகளோடு இந்த ஸ்மார்ஃபோன்கள் அறிமுகமாகின்றன. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.36,990 ரூபாய்க்கும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.39,990 ரூபாய்க்கும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.44,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மார்ச் 4ம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்