அலெக்ஸா போல உலகம் முழுவதிலும் மிட்ஸுகு, க்ளெவர்போட் போன்ற பல ஏ.ஐ போட்-கள் உள்ளன. இந்நிலையில் அவற்றை விட மிகவும் நுட்பமான திறன் கொண்ட மனிதர்கள் கேட்பதை மிக துல்லியமாக புரிந்துக் கொள்ளக்கூடிய போட் ஒன்றை கூகிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. மீனா எனப்படும் இந்த ஏ.ஐ மற்ற போட்-களை விட மனிதர்கள் பேசுவதை மிக துல்லியமாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் என்று கூறப்படுகிறது.
ஒரு மனிதர் பேசுவதை மற்றொரு மனிதர் புரிந்து கொண்டு பதில் சொல்வது 86% என்றால் மீனாவின் துல்லியம் 79% ஆகும். இதனால் மீனாவோடு பேசுவது ஒரு எந்திரத்தோடு பேசுவது போல அல்லாமல் உண்மையான பெண்ணோடு பேசுவது போலவே இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற போட்கள் இதைவிட மிகவும் குறைவான துல்லிய திறன் பெற்றவை. கூகுளின் இந்த புதிய ஏ.ஐ போட்-க்காக பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.