அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.