முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (11:47 IST)
கூகுள் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த முக்கிய வசதி ஒன்றை நேற்று முதல் நிக்கியுள்ளது. கெட்டி இமேஜ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து இந்த வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கூகுள் பக்கத்தில் உள்ள இமேஜ் பகுதியில் முன்பு வியூ இமேஜ் என்ற ஆப்சன் இருந்தது. தேடப்படும் இமேஜ்களில் ஒரு குறிப்பிட்ட இமேஜை அந்த இணையதளத்திற்கு சென்று பார்க்காமல், இமேஜை மட்டும் கூகுள் இமேஜில் இதுவரை பார்க்க முடிந்தது.

ஆனால் பிப்ரவரி 16ஆம் தேதியான நேற்றுமுதல் இந்த வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனமும் கெட்டி இமேஜ் நிறுவனமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் இந்த வசதியை கூகுள் தனது பயனாளிகளுக்கு அளித்து வந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதை அடுத்து இந்த வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்