உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்களை கவரும் விதமாக Google Play store ல் ஏராளமான கேம்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கேம்களை ஸ்மார்ட்போனில் விளையாட முடிந்தாலும் PCல் விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. ஏனென்றால் PC ல் மைக்ரோசாப்ட் இயங்குதளமே உள்ளதால் அது ஆண்ட்ராய்டு கேம்களை சப்போர்ட் செய்யாது. இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் PC-ல் கேம்கள் விளையாடும் விதமாக Xbox அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியது.
ஆண்ட்ராய்டில் விளையாடும் பல கேம்களும் Google Play Games store ல் கிடைக்கின்றன. எனினும் Free Fire, Call of Duty, Battleground போன்ற கேம்கள் இன்னும் Google Play Games ல் இடம்பெறவில்லை. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு விளையாட்டுகளும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.