ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஐடியா, வோடப்பொன், ஏர்செல் என அனைத்து நிறுவனங்களும் சலுகைகளை வழங்கிய போது எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தது டோகோமோ.
ஆனால், திடீரென தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் டோகோமோவின் சலுகை, ஜியோவின் ரூ.98 ரீசார்ஜ் சலுகையை விட சிறந்ததாக உள்ளது என்பதுதான்.
டோகோமோவின் ரூ.82 ரீசார்ஜ் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி அளவிலான 3ஜி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்ற விகிதத்தில் ஆக மொத்தம் வேலிடிட்டி காலத்திற்கு மொத்தம் 2800 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.