பி.எஸ்.என்.எல். வழங்கும் 120 ஜிபி டேட்டா ஆஃபர் ! கஸ்டமர்ஸ் ஹேப்பி!

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (15:30 IST)
பி.எஸ்.என்.எல் நிறுவனமானது அதன் போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்கு புதிய ஆஃப்பர் அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையின் அடிப்படையில் பயனாளர்களுக்கு 120 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
சமீபத்தில் கூட ஜியோ நிறுவனம் அதிரடியான ஆஃபர்களை வழங்கி இந்திய ஜனத்தொகையில் பெருவாரியான மக்களை தன் ஜியோ நெட்வொர்க்கை உபயோகப்படுத்த வைத்துள்ளது. 
 
ஜியோவின் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் உள்ள மற்ற நெட்வொர்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்தந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக்கொள்ள பலவகையான ஆஃப்பர்களை வாரி தருகிறார்கள்.
 
மக்களுக்கு நெட் இல்லாமல் கையும் காலும் மட்டுமல்லாது, அந்த நாளும் நிம்மதியாக கழியாது என்று நினைக்கிறார்கள். அதனால்  அன்லிமிட்டேட் கால்கள், மற்றும் அன்றாடம் எஸ்.எம்.எஸ்கள் , டேட்டாக்கள் என சரமாரி சலுகைகளில் வாடிக்கையாளரின் கவனம் ஈர்க்கிறார்கள். 
எனவே மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்  ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் சிடிஎம்.ஏ திட்டம் கொண்டு வந்து அனைத்து மக்களையும் தம் வசம் ஈர்த்த மாதிரி தற்போது இளைஞர்களை கருத்தில் கொண்டு ஜியோவை அறிமுகம் செய்ய மற்ற நெட்வொர்க்குக திக்குமுக்காடிபோயின.
 
இதனையடுத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிஎஸ்.என்.எல் நிறுவனம் தற்போது தன் வாடிக்கையாளர்களைக் கவர திட்டம் வகுத்து வருகிறது.
அதனடிப்படையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அவ்வப்போது புதிய அதிரடி ஆஃப்பர்களை வழங்குகிறது. அதுபோல தற்போது இந்திய டெலிகாம சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக மற்ற நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு வழங்கும் ஆஃபர்களை அளித்து வருகின்றன.
 
தற்போது பி.எஸ்.என்.எல் ரூ. 798 என்ற விலையில் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு  புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்.., அத்துடன் 120 ஜிபி /3ஜி டேட்டா வழங்கும்கிறது.
 
ஆனால் மற்ற நெட்வொர்க்கில் உள்ளது போன்று டேட்டா ரோல் ஓவர் சலுகை பி.எஸ்.என்.எலில் அளிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் பயனற்றுப் போகும்.
இப்புதிய ஆஃப்பரில் நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படும்.இந்த திட்டம் தற்போது கர்நாடகத்தில் மாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இனி மற்ற ஊர்களிலும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இச்சலுகை ஏர்டெல்லுக்குப் போட்டியாக அமைந்துள்ளது.மேலும் அமேசான் நெட்பிலிக்ஸ் சந்தா, ஜீ 5 திரைப்படம் 100 ஜிபி வரை டேட்டா ஓவர் வசதி அளிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்