இந்தியாவின் ஆரம்பகால பாரம்பரிய வண்டிகளில் ஒன்றான செட்டாக் ஸ்கூட்டரை மீண்டும் உற்பத்தி செய்யப் போவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆரம்ப காலம் தொட்டே மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற சில வாகனங்கள் உண்டு. அதில் ராயல் என்பீல்டு, பஜாஜ் மேக்ஸ் 100, டிவிஎஸ் சேம்ப் போன்றவை மிக பிரபலமானவை. அதே காலக்கட்டத்தில் 1970 முதல் 90 களின் இறுதி வரை பல நடுத்தர மக்களின் வாகனமாக திகழ்ந்ததுதான் பஜாஜ் செட்டாக் என்னும் ஸ்கூட்டர் வகை.
இப்போதும் படங்களில் பழைய காலக்கட்டத்தை காட்டுவது என்றாலே நிச்சயமாக அதில் ஒரு செட்டாக் வாகனம் இடம்பெறும். தற்போது பல நிறுவனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வாகன மாடல்களை மீண்டும் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் பஜாஜ் நிறுவனம் தங்களது செட்டாக் ஸ்கூட்டரை ’செட்டாக் சிக் எலக்ட்ரிக்’ என்ற பெயரில் மீண்டும் உற்பத்தி செய்ய இருக்கின்றனர். தற்போதைய அதிநவீன வாகனங்களின் வசதிகளோடே பழைய லுக்கில் உருவாக்கப்படும் செட்டாக்கின் விலை ஒரு லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.