பணம் இருக்கும் ஏடிஎம்-யை அறிய உதவும் ஃபேஸ்புக்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (19:46 IST)
ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் நமக்கு அருகாமையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.


 

 
நாடு முழுவதும் பணத்தாடுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 
எந்த ஏடிஎம் மையத்தில் பணம் இருக்கிறது என்று ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் தேடி தேடி அழைக்கின்றனர். பணம் இருக்கும் ஏடிஎம் மையத்தை அனைவரும் அறிந்துக்கொள்ள cashoncash என்ற இணையதளம் பக்கத்தை ஒன்று உருவாக்கி அதில் ஏடிஎம் மையத்தில் பணம் மற்றும் பணம் எடுக்க நிற்பவர்களின் கூடம் குறித்து தகவல் பதிவிடும் வகையில் அமைத்திருந்தனர். இதில் பணம் எடுக்க செல்பவர்கள் அவர்கள் சென்று பார்க்கும் ஏடிஎம் மையம் குறித்து அவர்களே தகவலை பதிவு செய்ய வேண்டும். 
 
இது பிறருக்கு ப்ந்ரிய அளவில் உதவியாய் அமையும். அப்படியே சிறிது நாட்கள் நன்றாக இயங்கியது. பின்னர் தற்போது அந்த இணையதளத்தில் யாரும் தகவல்கள் பதிவிடுவது இல்லை. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் ஏடிஎம் பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அனைவரும் எப்போதும் பயன்படுத்தும் ஒன்று. 
 
இதனால் ஏடிஎம் குறித்து தகவல் பதிவிட இது எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலி மூலம் பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை அறிந்து கொள்ள முடியும். 
 
மெசேஞ்சரில் ATMBOT என்று டைப்செய்து தேடுதல் குறியை அழுத்த வேண்டும். பின், உங்களுக்கு அருகாமையில் பணம் இருக்கும் ஏடிஎம்களின் முகவரி திரையில் தோன்றும். அதில் பணம் இருக்கும் ஏடிஎம் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும். மேலும் ஏடிஎம் மையங்கள் சார்ந்த தகவல்களையும் நீங்கள் வழங்க முடியும். 
அடுத்த கட்டுரையில்