பாதுகாப்பு பிழையை கண்டறிந்த பெண்; ரூ.71 லட்சம் வழங்கிய கூகுள்

வெள்ளி, 19 ஜனவரி 2018 (17:15 IST)
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் உள்ள பாதுகாப்பு பிழையை கண்டறிந்த பொறியாளருக்கு சுமார் ரூ.71 லட்சம் தொகையை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

 
ஆண்ட்ராய்டு பாதுகாப்பு விருதுகள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் குவோங் கோங் என்பவர் தான் கண்டறிந்த பிழையை சம்ர்பித்தார். இவரது பிழையை உறுதி செய்த கூகுள் குவோங் கோங்-க்கு 1,05,000 டாலர்கள் சன்மானம் வழங்கியுள்ளது.
 
கூகுள் வரலாற்றில் இத்தகைய சன்மானம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இத்துடன் குரோம் ரிவார்ட்ஸ் திட்டத்தில் கூடுதலாக 7500 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைப்பக்கத்தில் இந்த பிழையின் தொழில்நுட்ப விவரங்களை கூகுள் பதிவிட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட்டில் மட்டும் 42 பிழைகள் சரி செய்யப்பட்டதாக கூகுள் தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயக்குதள பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு ரிவார்ட்ஸ் திட்டத்தில் பிழைகளை கண்டறியும் ஆய்வாளர்களுக்கு கூகுள் சார்பில் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்