கூகுள் டிரெண்ட்ஸில் முதல் இடம் பிடித்துள்ளார் கோலி, அதுவும் இந்தியாவில் அல்ல பாகிஸ்தானில். ஆம், பாகிஸ்தானில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் கோலி முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஷாஹித் அப்ரிடி அணியில் இருந்த போது பல முறை அவர் முதல் இடம் பிடித்து இருக்கிறார். ஆனால், தற்போது கோலி அதிக அளவில் தேடப்பட்டுள்ளார்.