ஜியோவிற்கு பயந்து இலவசம் வழங்க முடியாது: ஏர்டெல் தடாலடி!!

வியாழன், 3 நவம்பர் 2016 (12:30 IST)
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் இலவச சேவைகளை வழங்கும் எண்ணமில்லை என்று கூறியுள்ளது. 


 
 
தொலைத் தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த கட்டணத்தில் சேவைகளை அளித்து வருகிறது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல், தொலைத் தொடர்பு துறை கொடூரமான சந்தை போட்டியை சந்தித்து வருகிறது என குறிப்பிட்டார். 
 
இந்த சந்தைப் போட்டியில் ஏர்டெல் கட்டணக் குறைப்புக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. அதேசமயம் இலவச சேவை வழங்கும் எண்ணமில்லை என அறிவித்துள்ளது.
 
ஏர்டெல் ஏற்கெனவே அன்லிமிடெட் இலவச குரல் வழி சேவையை (ரூ.999க்கு) அளித்து வருகிறது. எனவே, முழுவதுமாக இலவச சேவையை வழங்கும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்