ஏர்டெலுக்கு சமமாக கட்டணத்தை உயர்த்திய வோடபோன் - ஐடியா (Vi): பயனர்கள் பாவம்யா!!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (12:52 IST)
ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றி வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

 
இந்தியாவில் பரவலாக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இரு நிறுவன ரீசார்ஜ் ப்ளான்களும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே தொடர்ந்து வந்தன. தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியது. 
 
குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை 79 ஆக இருந்த நிலையில் தற்போது 99 ரூபாயாக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ் முதலில் 219 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுபோல அனைத்து ப்ளான்கள் விலையும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றி வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆம், பிரீபெய்டு கட்டணங்களை 20 - 25% வரை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள், நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
 
வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டண விவரம் பின்வருமாறு... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்