சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:05 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 14 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதுவரை மும்பை அணி 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. இரண்டாவது கட்டமாக நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் மும்பை இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் அடித்தால் டி-20 போட்டிகளிலேயே 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம்.
இதனால் ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி இந்த சாதனை படைக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

மேலும், இப்பட்டியலில் ரெய்னா 324 சிக்சர்களுடன் 2 வது இடத்திலும், கோலி 315 சிக்ஸர்களுடன்  3 வது இடத்திலும்,  உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்