இதெல்லாம் கேப்டன்ஷிப்பா...? தோனியை வறுத்தெடுத்த காம்பீர்!

புதன், 23 செப்டம்பர் 2020 (15:57 IST)
தோனியின் நேற்றைய போட்டியின் முடிவுகள் குறித்து கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் தோனியைப் பற்றி கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தோனி ஏன் முன்னரே களம் இறங்கவில்லை என புரியவில்லை. தோனி கேப்டனாக அணியை முன்நின்று வழிநடத்தி இருக்க வேண்டாம்? இதை கேப்டன்ஷிப் என அழைக்காதீர்கள். 
 
தோனி இறங்கும் போது ஆட்டம் முடிந்துவிட்டது. கடை சி ஓவரில் 3 கிக்ஸ் அடித்ததில் என்ன பயன்? ஆனால் அதை பெரிதாக பேசுவார்கள். தோனி செய்ததை வேறு கேப்டன் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தோனி என்பதால் அவரை யாரும் விமர்சிப்பதில்லை. 
 
தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் முன்நின்று அணியை வழிநடத்தி இருக்கலாம். இது சரியான கேப்டன்சியே இல்லை. தோனி போன்ற ஒருவரிடம் இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என விமர்சித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்