குறிப்பாக பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது. ஆனால், சென்னையில் லோகல் டிரைன் (புறநகர் ரயில் சேவை ) இல்லாதது பெரும் கவலையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என ரயில்வேதுறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும், அவர் ரயில் பயணிக்கும் போது பயணிகளுக்கு கொரோனா பாதிக்காமல் இருக்க பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.