ஐபிஎல் -2022 ; ஹைதராபாத் அணிக்கு சொற்ப ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (21:33 IST)
ஐபில்   திருவிழா சீசன் -15 இந்தியாவில் நடந்து வரும் நிலையில் இன்று  பெங்களூர் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

இதில் டுபிளஸிஸ் ரசிகர்களை ஏமாற்றி 5 ரன் களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களும் சோபிக்கவில்லை.

ராவட் மற்றும் கோலி டக் அவுட் ஆகினர். மேக்ஸ் வெல் 12 ரன்களும், பிரபுதேசாய் 15 ரன்களும்,  அஹமத் 7 ரன்களும் படேல் 4 ரன்களுமா மொத்தம் 16.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 68 ரன் கள் மட்டுமே எடுத்து ஹைதரபாத் அணிக்கு 69 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்