மாஸாக எண்டு கார்ட் போட்ட சிஎஸ்கே! – ரசிகர்களுக்கு சுட்டி குழந்தை சாம் ட்வீட்!

திங்கள், 2 நவம்பர் 2020 (08:22 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் கடைசி போட்டியை நேற்று சிஎஸ்கே விளையாடி வென்ற நிலையில் சிஎஸ்கே வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் ஆரம்பம் முதலாக மோசமான ஆட்டத்தால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்தது சிஎஸ்கே. ஆனால் கடந்த 3 போட்டிகளாக தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தனது கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது சிஎஸ்கே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய சிஎஸ்கே ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 19வது ஓவர் முடிவிலேயே 154 ரன்கள் சேஸ் செய்து பஞ்சாப்பை வீழ்த்தியது. கடைசி ஆட்டம்தான் என்றாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மன நிறைவை அளித்த ஆட்டம்.

இந்நிலையில் தாயகம் புறப்பட உள்ள சிஎஸ்கே அணியின் சுட்டி குழந்தை என செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன் தனது ட்விட்டரில் ”இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.. விசில் போடு” என பதிவிட்டுள்ளார். சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடியதற்காக சாம் கரனுக்கும் பலர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்