மும்பையை பழிதீர்க்குமா தோனியின் சிஎஸ்கே அணி?

ஞாயிறு, 12 மே 2019 (08:33 IST)
ஐபிஎல் 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் லீக் போட்டிகளில் இரண்டு முறையும், பிளே ஆஃப் சுற்றில் ஒருமுறையும் மும்பையிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விகளுக்கு ஒட்டுமொத்தமாக இன்று நடைபெறும் ஒரே ஒரு போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று, மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்பதே சிஎஸ்கே அணியினர்களின் விருப்பமாக உள்ளது
 
இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை 16 முறையும், சிஎஸ்கே 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 
 
இதுவரை பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே அணி 10 முறையும், மும்பை 7 முறையும் தகுதி பெற்றுள்ளன. அதேபோல் இன்று நடைபெறும் போட்டியையும் சேர்த்து இதுவரை சிஎஸ்கே அணி 8 முறையும் மும்பை அணி 5 முறையும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிகளில் மட்டும் மோதியுள்ளது. இதில் மும்பை இரண்டு முறையும் சிஎஸ்கே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 
 
மேலும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் இதுவரை தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல்முறையாக நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் அணி என்ற பெருமையை பெறும்.
 
மும்பை அணியின் ரோஹித் சர்மா, டீகாக், ஹர்திக் பாண்டே, இஷான் கிஷான், பும்ரா, பொல்லார்டு, மலிங்கா ஆகியோர்களும், சிஎஸ்கே அணியில் தோனி, பிராவோ, டூபிளஸ்சிஸ், வாட்சன், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா, ரெய்னா ஆகியோர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி கடுமையாக போராடியே வெற்றிக்கனியை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்