சிஎஸ்கே அணிக்கு 148 ரன்கள் இலக்கு: இறுதிக்கு செல்லப்போவது யார்?

வெள்ளி, 10 மே 2019 (21:19 IST)
இன்று விசாகபட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுக்கள் இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.
 
ரிஷப் பண்ட் 38 ரன்களும், முன்ரோ 27 ரன்களும், தவான் 18 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியை பொருத்தவரை தீபக் சஹார், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்
 
இந்த நிலையில் 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது. டூபிளஸ்சிஸ், வாட்சன், ரெய்னா, தோனி, ராயுடு, ஜடேஜா, பிராவோ, தோனி என நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட சிஎஸ்கே அணி இந்த இலக்கை எளிதில் எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்