நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிவில்லியர்ஸ் அபார பேட்டிங்கால் 202 ரன்கள் குவித்தது. 203 என்ற இலக்கை நோக்கி விளையாடி பஞ்சாப் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் எடுத்து வந்ததால் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10வது ஒவருக்கு பின் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தியதால் பஞ்சாப் அணியால் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை. கடைசி 12 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் 19வது ஓவரில் 3 ரன்களும், 20வது ஓவரில் 8 ரன்களும் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது