சிங்கங்களுடன் மோதப்போவது யார்? ஐபிஎல் கோப்பை யாருக்கு?

Webdunia
வியாழன், 24 மே 2018 (12:41 IST)
ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் நிறைவடைந்து ப்ளே ஆஃப் போட்டிகள் துவங்கியுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிக்கு சென்னை, ஐதராபாத், கொலகத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முன்னேறின. 
 
குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
 
நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி குவாலிபையர் 2 ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. 
 
ராஜஸ்தான் அணி போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில், நாளை குவாலிபையர் 2 கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இண்டஹ் போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. 
 
ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2 வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்டன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேறும். இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டியின் போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.  
 
எந்த அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாலும், கோப்பையை சென்னை அணி கைப்பற்ற வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து களமிறங்கியுள்ள சென்னை அணிக்கு இரு ஒரு சிறந்த வெற்றியாக இருக்கும் எனவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்