சளித்தொல்லைக்கான நிவாரணத்தை தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.
* துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.
Ads by
* ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் துளசியை சாப்பிட்டால் நுரையீரலை காப்பாற்றும். அதில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோய் கூட கட்டுப்படுத்தும்.
* துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வறட்டு இருமல் சளி இருமல் இருப்பவர்கள் துளசியை மென்றாலே பலன் காணலாம்.
* துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக்குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.
* தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.