டைட்டானிக் திரைப்பட நடிகர் காலமானார்.. ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல்..!

Siva

திங்கள், 6 மே 2024 (07:13 IST)
டைட்டானிக் திரைப்படத்தில் நடிகர் காலமானதை அடுத்து ஹாலிவுட் திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் என்ற திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலிலும் சாதனை செய்தது என்பது தெரிந்தது.

முழுக்க முழுக்க ஒரு கப்பலை சுற்றிய காட்சிகள் அமைந்திருக்கும் இந்த படத்தில் கப்பலின் கேப்டனாக நடிகர் பெர்னார்ட் ஹில் என்பவர் நடித்திருப்பார். இந்த படம் மூலம் அவர் உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக மாறிய நிலையில் அதன் பின்னர் ’லார்ட் ஆப் த ரிங்ஸ்’  உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் 79 வயதான பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது காலமானார்.  அவரது மறைவு ஹாலிவுட் திரை உலகிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்