சமீபத்தில் சிறந்த படம், சிறந்த சர்வதேசப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் திரைப்படம் கிராஃபிக் நாவலாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
92 வருட ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பற்ற முதல் அயல்மொழித் திரைப்படம் என்ற பெருமை பெற்ற ’பாரசைட்’ திரைப்படத்தின் முன் தயாரிப்பில், ஸ்டோரிபோர்ட் எனப்படுகிற, படத்தின் காட்சிகளைப் பற்றிய வரிவடிவப் படங்கள் தற்போது கிராஃபிக் நாவலாக மாற்றப்படவுள்ளதாக இந்த படத்தின் குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் பாங் ஜூன் ஹோ என்பவர் தான் இந்த வரிவடிவப் படங்களை வரைதார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் செண்ட்ரல் பப்ளிஷிங் என்ற நிறுவனம் இந்த கிராபிக் நாவலை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. 304 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் மே மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே தென் கொரியாவில் இந்த நாவல் வெளியாகிவிட்டாலும் அது கொரிய மொழியில் உள்ளது. அமெரிக்கா ஆங்கில மொழியில் வெளியாகும் இந்த நாவல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது