28 வட இந்தியர்களும் என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்கள்தான்: என்.எல்.சி விளக்கம்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (16:14 IST)
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி நிலம் கொடுக்காதவர்களுக்கும்  பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக 28 வட இந்தியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து என்எல்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது. நெய்வேலி என்எல்சியில் வட இந்தியர்கள் பணி நியமன சர்ச்சை குறித்து என்எல்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் பணி வழங்கப்பட்டுள்ள 28 பேரும் ராஜஸ்தானில் உள்ள என்என்சிக்கு நிலம் வழங்கியவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்