ஹாங்காங் சினிமாக்களில் ட்ராகன் லார்டு, ட்ரங்கன் ட்ராகன், ப்ராஜெக்ட் ஏ உள்ளிட்ட படங்களில் நடித்தபோதும், ஹாலிவுட்டில் ராப் பி ஹூட், ஃபாரினர், வான்கார்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தபோதும் சரி ஆக்ஷனுக்கு பஞ்சம் வைத்ததே இல்லை ஜாக்கிச்சான்.
தற்போது “ரைட் ஆன்” படத்தின் மூலமாக குதிரை ஒன்றுடன் அடுத்த அதிரடி காமெடி ஆக்ஷனில் களம் இறங்கியுள்ளார் ஜாக்கிச்சான். சினிமாவில் இருந்து விலகிய சண்டை பயிற்சியாளர் ஜாக்கியும், அவரது குதிரையும் செய்யும் சாகசங்கள்தான் இந்த “ரைட் ஆன்” படம். இந்த படம் ஏப்ரல் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.