இனி டிஸ்னி ஹாட்ஸ்டார்ல இதெல்லாம் பாக்க முடியாது? – அதிர்ச்சியில் சப்ஸ்க்ரைபர்ஸ்!

செவ்வாய், 21 மார்ச் 2023 (12:24 IST)
இந்தியாவில் பிரபலமான ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலிருந்து இணை ப்ளாட்பார்ம்கள் வெளியேறுவதால் பெரும்பாலான வெப்சிரிஸ்கள், நிகழ்ச்சிகள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரபலமான ஓடிடி தளங்களில் நெட்ப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோவுக்கு நிகராக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளமும் உள்ளது. மார்வெல் திரைப்படங்கள், வெப் சிரிஸ் உள்ளிட்டவற்றை பல மொழிகளில் வழங்கி வருவதுடன், சொந்தமாக க்ரிமினல் ஜஸ்டிஸ், ருத்ரா, க்ரேட் இந்தியன் மர்டர் உள்ளிட்ட பல வெப் சிரிஸ்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடரையும் நேரடியாக ஒளிபரப்பி வந்ததால் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் ஒளிபரப்பு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வராது என்பதுடன், எஃப் 1 சேனலும் டிஸ்னி ஹாட்ஸ்டாருடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது.

இதையடுத்து தற்போது புகழ்பெற்ற ஹெச்பிஓ மேக்ஸும் தனது ஹாட்ஸ்டாருடனான ஒப்பந்தத்தை முடிக்கிறது. இந்த ஆண்டுடன் இந்த ஒப்பந்தம் முடியும் நிலையில் ஹெச்பிஓவை தற்போது கையாளும் டிஸ்கவரி நிறுவனம் கேட்கும் ஒளிபரப்புக்கான தொகை அதிகமாக இருப்பதால் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாததாக கூறப்படுகிறது. இதனால் ஹெச்பிஓ மூலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ள கேம் ஆப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆப் ட்ராகன், வெஸ்ட் வோர்ல்ட் ஆகிய தொடர்களை இனி ஹாட்ஸ்டாரில் காண முடியாது என கூறப்படுகிறது. இது மேலும் ஹாட்ஸ்டாரின் சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்